மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க. மற்றும் அதற்கு துணை போகும் அ.தி.மு.க.வை கண்டித்து வரும் 12-ம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும், நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் மத்திய பா.ஜ.க. அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அடிமை அ.தி.மு.க.வையும் கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் 12.02.2026 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தி.மு.க.வினர் அனைவரும் கலந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.