லுசாகா: ஜாம்பியா நாட்டின் அதிபர் தேர்தலில் ஹகைண்டே ஹிச்சிலேமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் கடந்த 13ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. தேர்தலின் போது நடந்த வன்முறை, வாக்கு சீட்டுகள் திருடப்பட்ட சம்பவம் காரணமாக வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தற்போதைய அதிபர் ஹகைண்டே ஹிச்சிலேமா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மொத்தம் உள்ள 50 லட்சம் பேர் வாக்காளர்களில் 29 லட்சத்து 65 ஆயிரம் பேர் (61.4 %) அவருக்கு வாக்களித்துள்ளனர். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி தலைவர் பிரையன் முண்டுபிலேவுக்கு 18 லட்சத்து 56 ஆயிரம் வாக்குகள்(38 %) கிடைத்துள்ளது. ஹிச்சிலேமாவின் வெற்றி அறிவிக்கப்பட்ட பிறகு, அவரது ஆதரவாளர்கள் தலைநகர் லுசாக்காவில் உள்ள தெருக்களில், ஆடியும், பாடியும்,பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.