குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.. குடியரசு தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, கவர்னர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைக்க உள்ளார். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுக்கும்.
இந்நிலையில், குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள டுவிட்டர் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.