காலே: காலே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 462 ரன் குவித்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, காலேவில் கடந்த 15ம் தேதி துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய 2ம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன் குவித்திருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டம் துவங்கியதும் பிரசித் கிருஷ்ணா 2 ரன்னில் அவுட்டானார். இதனால், இந்திய அணி 462 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் பிரபத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், நுவாந்தா 3 விக்கெட்டும், பெர்னான்டோ 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை அணிக்கு, ஆட்டத்தின் 2வது பந்திலேயே சிராஜ் அதிர்ச்சி கொடுத்தார். அவர் நிஷான் பெர்னான்டோவை ரன் ஏதுமின்றி டக் அவுட்டாக்கினார். அடுத்து சண்டிமல் (4), உதாரா (27) ஆகியோர் மனவ் சுதார் பந்தில் நடையைக் கட்டினர். கமிந்து மென்டிஸ் (14) குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார். இதனால், இலங்கை அணி 59 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.