80-வது இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரை வக்பு வாரியக் கல்லூரி மற்றும் மதுரை எகனாமிக் சேம்பர் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்காக **“IITx Madurai”** எனும் அறிவுசார் ஆர்வ உரையரங்குப் போட்டியை 15.08.2026 அன்று நடத்தின.


இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது அறிவுத்திறன் மற்றும் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.


விழாவில் மதுரை மாநகராட்சி மேயர் (பொ)நாகராஜன் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் செயலாளர் ஆம்புலன்ஸ் சேக், பொருளாளர் பாரூக், மதுரை எகனாமிக் சேம்பர் நிர்வாகிகள் மற்றும் மதுரை வக்பு வாரியக் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு, போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.


மாணவர்களிடையே அறிவுத்திறன், பேச்சாற்றல் மற்றும் போட்டித் திறனை வளர்க்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அறிவுசார் நிகழ்வாக மாற்றியமைத்ததுடன், மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தது.