மதுரையில் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சேக் இப்ராஹிம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுதந்திர தினத்தின் சிறப்புகள் மற்றும் நாட்டின் ஒற்றுமை, சகோதரத்துவம் குறித்து பேசப்பட்டது.
இதில் தமுமுக மாவட்ட செயலாளர், தமுமுக ஆம்புலன்ஸ் சேக், மனிதநேய மக்கள் கட்சி (மமக) மாவட்ட செயலாளர் முபாரக் நிஜாமுதீன், மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் காஜா மைதீன், அனிபா, மொய்தீன் பாபு, ஆசக் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் அனைவரும் தேசிய ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்போம் என உறுதியேற்றனர்.