மதுரை, அக். 1-

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக நுழைவு பாஸ் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் நடந்தது.

இனி, பொது மக்களாகிய நாங்கள் கும்பாபிஷே

கத்தைப் பார்க்க வேண்டுமானால் இன்னும் 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என புலம்பித் தீர்த்ததோடு, அமைச்சர் நிர்மல் குமாரிடமும் இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி வாக்குவாதம் செய்தனர். ஆனால், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு காலை 10 மணிக்கு மேல் தான் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மதுரை மேயர் பொறுப்பு நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள், அனைவரும் கருப்பு சட்டை அணிந்து மதுரை மீனாட்சி சுந்த

ரேஸ்வரர் திருக்கோயில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பொது

மக்களை அனுமதிக்காத அளவிற்கு பல்வேறு மோசடிகள் நடந்து

ள்ளதாகவும், இதனைக் கண்டிக்கும் விதமாக தவெக அரசுக்கு எதிரா

கவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் மதுரை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.