மதுரை, அக். 18-
அதிமுகவின் 55-வது ஆண்டு விழாவையொட்டி, மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் நடைபெற்றது.
அவைத்தலைவர் அண்ணா துரை முன்னிலைவகித்தார். இக்கூட்டத்தில் மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு பங்கேற்று பேசினார். அதிமுக ஆண்டு விழாவை ஆண்டுவிழாவை யொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சியில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் எழுப்ப வேண்டியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.