மதுரை, அக். 18-
மதுரை மாநகராட்சியின் ஆய்வில் கடந்த 2025-26-ம் ஆண்டில் 1,169 எண்ணிக்கையிலான சாலைகள்
169.43 கி.மீ நீளத்துக்கு சேதமடைந் துள்ளன. இந்த சாலைகளை தற்போது ரூ.120.29 கோடி மதிப் பீட்டில் மறுசீரமைப்பு செய்து புதிதாக அமைக்க, நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தற்போது வரை 1,032 எண்ணிக் கையிலான சாலைகள் சுமார் 148.82 கி.மீ நீளத்துக்கு முடிக்கப் பட்டுள்ளன. மீதம் உள்ள 137 சாலைகள் 20.61 கி.மீ நீளத் துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சாலைகளில் ஏற்பட் டுள்ள பழுதுகளை சீரமைப்ப தற்கு (Road Patches) முதற் கட்டமாக 940 இடங்கள் கண்ட றியப்பட்டு ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் பார்க்கப்பட்டு வருகின்றன.
இதில் தற்போது வரை 746 இடங்களில் சாலை பழுதுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீத முள்ள 194 இடங்களில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. வரத்து அதிகமுள்ள சாலைக ளில் ஏற்பட்டுள்ள சாலை பழுதுகளை பருவமழைக்கு முன்பாக போர்க்கால அடிப் படையில் பணிகள் செய்வ தற்காக 902 சாலை பழுதுகளை சீரமைப்பதற்கு ரூ.1 கோடியே 53 லட்சத்து 80 ஆயிரத்துக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு 23.10.2026 அன்று டெண்டர் நடைபெற உள்ளது. விரைவில் சாலை சீரமைப்பு பணிகள் செய்து முடிக்கப்படும். பாதசா ரிகளின் வசதிக்காக முக்கிய போக்கு வரத்து சாலைகளின் நடை பாதையை சீரமைப்பதற்கு முதற்கட்டமாக 14 முக்கிய சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.64 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டில் விரைவில் பணிகள் செய்யப்பட உள்ளன என்றனர்.