மதுரை, அக். 18-

மதுரையைச் சேர்ந்த வக்கீல் செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் கொடுக்கப்படும் புகார்களை போலீசார் பெற்று உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தென் மாவட்டங்களில் போலீசார் இந்த விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுப்பதில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவான வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.