திமு கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மேற்கு மற்றும் மத்திய மாவட்டக் கழகங்களின் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கழக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் அவர்களுடன் இணைந்து, திருநெல்வேலி மேற்கு மற்றும் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்னிலையில், கழக நிர்வாகிகளுடன் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கழகத்தின் அமைப்பை மேலும் வலுப்படுத்துதல், நிர்வாகப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்தல் உள்ளிட்ட மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பாகப் பல்வேறு கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.