மதுரை,அக்.1-
மதுரை, நாகர்கோவில் மாநகராட்சிகளில், பாதாள சாக்கடை திட்டத்தை, தனியாருடன் இணைந்து செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் அனைத்தும், நகராட்சி நிர்வாகத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை, அந்தந்த மாநகராட்சிகள் மேற்கொள்கின்றன.
அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தனியார் மயமாக்கப்பட்டது. தொடர்ந்து, சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை, தனியாரிடம் கொடுக்க, கடந்த தி.மு.க., ஆட்சியில், ‘டெண்டர்’ கோரப்பட்டது. 111 கி.மீ., நீளம் அதன்பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக வந்த த.வெ.க., அரசு, சேலம் மாநகரா
ட்சியின் குடிநீர் விநியோ
கத்தை தனியாரிடம் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக, கழிவுநீர் மேலாண்மையை, தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ள, நகராட்சி நிர்வாகத்துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு, கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்ள, துறை சார்பாக ஏற்கனவே திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் ஏற்கனவே உள்ள கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்தி, தேவையான பகுதிகளில், புதிதாக அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பணிகளும், இடம் பெற்றுள்ளன. இதன் மதிப்பு, 2,377.48 கோடி ரூபாய்.
அதேபோல, நாகர்கோவில் மாநகராட்சி
யில், பாதாள சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில், 111 கிலோ மீட்டர் நீளத்துக்கு, கழிவு நீர் குழாய்கள், 19.93 கி.மீ., நீளத்துக்கு கழிவுநீர் உந்துக் குழாய்கள் உள்ளிட்ட பணிகள், 189.82 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்முறை இப்பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை, ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவனம் சார்பில், ‘டெண்டர்’ கோரப்பட்டு உள்ளது. இதில், தேர்வாகும் நிறுவனம், தனது அறிக்கையை ஐந்து மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், தனியார் பங்களிப்புடன் மதுரை, நாகர்கோவில் மாநகராட்சிகளில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த டெண்டர் விடப்படும். அதில் தேர்வாகும் நிறுவனம், திட்டத்தை செயல்படுத்தும்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், ‘நமக்கு நாமே’ திட்டம் வழியாக, 33 சதவீதம் தனியார் பங்களிப்புடன், சில பணிகள் மேற்கொள்ள
ப்பட்டன. ஆனால், பாதாள சாக்கடை திட்டத்தை, முழுமையாக தனியாரிடம் ஒப்படைப்பது இதுவே முதல் முறையாகும். ‘இந்த திட்டம் நல்லபடியாக முடிந்தால், அடுத்தடுத்த மாநகராட்சிகளிலும், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் பணியை, தனியாரிடம் ஒப்படைக்க, அரசு முடிவு செய்துள்ளது’ என, நகராட்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.