டெல்லி குண்டுவெடிப்புக்குப் பிறகு, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) அளித்த புகாரின் பேரில், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான இரண்டு தனித்தனி முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், அல் பலாஹ் பல்கலைக்கழகத்தின் தலைவரான ஜாவத் அகமது சித்திக்கியை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கைகளைத் தொடங்கியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு, அரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் தொடர்பான முறைகேடுகள் மற்றும் போலி ஆவணங்கள் குறித்து குற்றப்பிரிவு போலீஸார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

பல்கலைக் கழகத்தின் தலைவர் ஜாவத் அகமது சித்திக் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க குற்றப்பிரிவு குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். சித்திக்கின் ரூ.140 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.