மதுரை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் விளாங்குடி பகுதி 1-வது மற்றும் 20-வது வார்டு தலைமை சார்பில் அமைதி பேரணி மற்றும் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் தங்கபாண்டியன் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்போதையால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த பேரணியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக விளாங்குடி பகுதி செயலாளர் விஜய்விக்கி, 20-வது வார்டு வட்ட செயலாளர் விளாங்குடி எம்.ஜி.ஆர். 1-வது வார்டு வட்ட செயலாளர் **K. ஜோதிமணி** உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.