மொழிஞாயிறு தேவநேய பாவணர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது,
தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர். செடியாக தழைக்க செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள், நானே மரமாக வளர்த்து வருகிறேன் என தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவணர். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தை தம் வாழ்நாள் கடமையாக எண்ணி உழைத்தார். இந்திய மொழிகளிலேயே வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பாக தமிழின் தனித்தன்மையை பேணி காத்திட தனித்தழிறிஞர் பாவணர் வாழ்க. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.