புதுடெல்லி, அக். 2-
டெல்லி மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் இப்போது ஒரு புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டு
ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் நெருக்கம் காட்டி வரும் நிலையில், தேசிய அளவில் மட்டும் திமுக தங்களை ஆதரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் மூன்றாவது அணி ஒன்றை உருவாக்க திமுக காய்களை நகர்த்தி வருவதாகக் கூறப்படும் செய்தி, அகில இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது. இதனால் பல ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது.
“தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி, ஆனால் தேசிய அளவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுகவின் ஆதரவு வேண்டும்” என்ற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரு கணக்கு, டெல்லியில் ஒரு கணக்கு என்ற காங்கிரஸின் இந்த அணுகுமுறை திமுக தலைமையை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தங்களை தமிழகத்தில் கழற்றிவிட்டுவிட்டு, தேசிய அளவில் மட்டும் துணைக்கு அழைப்பதை திமுக நிர்வாகிகள் சற்றும் விரும்பவில்லை.
டெல்லியில் கெஞ்சிய காங்கிரஸ் பெண் தலைவர்
டெல்லியில் நேற்று நடைபெற்ற முக்கிய அரசியல் சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பெண் தலைவர் ஒருவர் திமுகவின் மூத்த தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.
அப்போது, “வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ‘இந்தியா’ கூட்டணியில் திமுக நீடிக்க வேண்டும்.. ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாநில அளவில் கூட்டணி வேறுபாடுகள் இருந்தாலும், தேசிய நலன் கருதி திமுக ஆதரவு அளிக்க வேண்டும்” என்று அவர் கிட்டத்தட்ட கெஞ்சும் தொனியில் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு திமுக தலைவர்கள் தரப்பில் உடனடியாக எந்தவொரு உறுதியான சாதகமான பதிலும் தரப்படவில்லை எனத் தெரிகிறது.
காங்கிரஸின் இந்த இரட்டை வேடத்தை முறியடிக்கவும், தேசிய அரசியலில் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்தவும் திமுக ஒரு புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு வலுவான “மூன்றாவது அணி”யை உருவாக்கும் திட்டத்தில் திமுக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
இந்த புதிய கூட்டணியில் சேர பல முக்கிய மாநிலக் கட்சிகளுடன் பேச்சு
வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டா
ரங்கள் தெரிவிக்கின்றன:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, காக்ரோச் ஜனதா பார்ட்டி போன்ற செல்வாக்குமிக்க இதர மாநிலக் கட்சிகள், காங்கிரஸ் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கருதும் திமுக, இந்த மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து தனி சக்தியாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்தத் தகவலால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால், திமுக போன்ற வலிமையான மாநிலக் கட்சிகள் தனி அணியாக உருவெடுத்து, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் போன்ற தலைவர்களை இணைத்துக் கொண்டால், அது ராகுல் காந்தியின் பிரதமர் கனவை தகர்த்துவிடும். இந்தியா கூட்டணி உடைந்தால், வாக்குகள் சிதறி அது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையே சீர்குலைத்துவிடும் என்பதால் காங்கிரஸ் தலைமை செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
மாநிலத்தில் ஒரு கூட்டணி, மத்தியில் ஒரு கூட்டணி என்ற இரட்டை நிலைப்பாட்டை எடுக்க நினைத்த காங்கிரஸுக்கு, திமுகவின் இந்த மூன்றாவது அணி வியூகம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி
யுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை திமுக ஏற்குமா அல்லது மாநிலக் கட்சிகளைத் திரட்டி மாற்று சக்தியாக நிற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.