திருப்பூர், அக். 2-

தாராபுரத்தில் நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சர் விஜய், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொ

ண்டார்.

விஜய் முன்னிலையில் சத்யபாமா, தன்னை அதிமுகவினரும் - திமுகவினரும் அசிங்க அசிங்கமாக பேசுகிறார்கள் என கண்ணீர் மல்க பேசினார். அப்போது முதல்வர் விஜய் மேடையிலேயே அவருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில் சத்யபாமா நடத்தியது தேர்தல் பிரச்சாரம் அல்ல, அவர் நீதிக்கண்ணீர் வடித்து

ள்ளார் என விமர்சித்துள்ளார் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளரும், எம்பியுமான இன்பதுரை.

தாராபுரம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்க

ப்பட்டிருக்கும் நிலையில் வேட்பாளர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றனர்.

தாராபுரம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் எம்பியுமான இன்பதுரை வாக்கு சேகரித்தார். பின்னர் நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டார். தொடர்ந்து தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,” தவெக வேட்பாளர் சத்யபாமாக நடத்தியது தேர்தல் பிரசாரம் அல்ல; ஓரங்க நாடகம். அவர் நீலி

க்கண்ணீர் வடித்துள்ளார். கடந்த தேர்தலில் தாராபுரம் தொகுதி மக்கள் அதிமுகவுக்குத்தான் வாக்களித்தனர்.

தற்போது தொகுதி மக்கள்தான் ரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர். தொகுதிக்குள் செல்ல முடியாத நிலையில் தவெக வேட்பாளர் இருக்கிறார். முதல்வர் பங்கேற்ற கூட்டத்திற்கு பெருந்துறை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆட்கள் அழைத்து வரப்பட்டனர்.

அமைச்சர் ராஜ்மோகன் கூறிய பிறகு தான் வேட்பாளர் அழுதார். இது கண்ணீர் பூக்கள் டிராமா. பிரசாரத்தில் என்ன செய்தார்கள் என்பதை கூறாமல், எதற்காக வாக்களிக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்காமல் திமுகவை விமர்சிப்பது மட்டுமே நடக்கிறது. மேலும், அரசில் என்ன நடக்கிறது என்பதே தவெக தலைமைக்கு தெரியவில்லை. மக்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி கொந்தளிப்பில் உள்ளனர்.

வேட்பாளரின் பின்னால் காவல்துறை

யினர் செல்வதை தனது சிறு வயதுக்குப் பிறகு தற்போது தான் பார்க்கிறேன். அரசியல் கட்சியில் அரசியல் வரும்; நாடக கம்பெனியில் இணைந்தால் நாடகம் தான் போட முடியும். திமுக தனது கூட்டணி கட்சிகளை களமிறக்கி, திமுக-தவெக போட்டி நடைபெறுவது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே எம்.எல்.ஏ.வை களவாடினார். இப்போது வாக்காளர்களை களவாட முயற்சிக்கிறார்.

தாராபுரம் இடை

த்தேர்தல் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கிறது. அதிமுகவின் வெற்றியை களவாட யாரையும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மேலும், கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் மூலம் நாடக கம்பெனியின் முகத்திரை கிழியும் வேட்பாளர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையன் வழங்கிய பட்டியலின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் நடைபெறுகிறது.

எடப்பாடி பழனிசாமி ஓட்டு கேட்கவில்லை; நியாயம் கேட்கிறார். தவெகவினர் மக்களை முட்டாள் என்று நினைக்கிறார்களா? தவெகவுக்கு ஒரிஜினல் சக்தி இல்லை; அது வாடகை நாற்காலியில் செயல்படுகிறது. இரவல் சக்தியான மண் குதிரை விரைவில் கரைந்து விடும். வேட்பாளரின் கண்ணீர் ஓட்டாக மாறாது; தொகுதி மக்கள் வடிக்கும் ரத்தக் கண்ணீர் அதிமுக ஓட்டாக மாறும்” என இன்பதுரை தெரிவித்தார்.