ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் ஹரியானாவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது; டங்தாருவிலிருந்து சவுந்தர் என்ற பகுதியை நோக்கி, ஹரியானா பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ கார் சென்று கொண்டிருந்தது. இன்று காலை சுமார் 11 மணியளவில் யென்வான் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, செனாப் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்ததும் தச்சன் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.