இண்டியா கூட்டணியில் தற்போது காங்கிரஸ் மட்டும்தான் இருக்கிறது. தி.மு.க. இல்லை’ என்று கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டில்லி செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது அவரிடம் ‘டெல்லியில் மக்களவைத் தலைவர் அளித்த தேநீர் விருந்தில் திமுக சார்பில் நீங்கள் பங்கேற்றது குறித்து சர்ச்சை எழுந்துள்ளதே?’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ‘இதில் சர்ச்சை ஆவதற்கு என்ன இருக்கிறது? நாடாளுமன்றத்தில், எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளை மாற்றித்தர வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் ஏற்கெனவே கேட்டிருந்தோம். அதுதொடர்பாக அவரை நேரில் சந்தித்து பேசுவதற்காகவே அங்கு சென்றோம்’ என்று கனிமொழி தெரிவித்தார்.

தொடர்ந்து, ‘இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், நீங்கள் பங்கேற்றது ஏன்?’ என்று கேட்டதற்கு, ‘இண்டியா கூட்டணியில் தற்போது காங்கிரஸ் மட்டும்தான் இருக்கிறது. நாங்கள் இல்லை’ என்று கனிமொழி தெரிவித்தார்.