மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தேவர் பேரவை நிர்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் திருமாறன் ஜி உள்ளிட்டோர் தமிழக சட்டமன்ற சபாநாயகர் இடம் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் சார்லஸ் மார்ட்டின் அளித்த மனு தொடர்பாக தமது கண்டனங்களை பதிவு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் இந்த மருத்துவமனை முக்குலத்தோர் சமுதாயத்தின் அடையாளம் மற்றும் ஏழை எளிய மக்களின் புகலிடமாகத் திகழ்கிறது. குறிப்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்கள் இந்த மருத்துவமனையைத் தங்கள் சொந்த வீடு போலக் கருதுகின்றனர். சேதுராமன் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் பல பள்ளிக்கூடங்களைக் கட்டியுள்ளார். மேலும், பசும்பொன் போன்ற இடங்களுக்கு வருவோருக்கு லட்சக்கணக்கானோர் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய அளவில் அன்னதானம் வழங்கி வருகிறார். மதுரையில் உள்ள மற்ற மருத்துவமனைகள் ஆயிரக்கணக்கில் கட்டணத்தைக் குறைக்க மறுக்கும் சூழலில், இந்த மருத்துவமனையில் ஏழைகளின் கஷ்டத்தைப் பார்த்து அதிகாரிகளே கட்டணத்தைக் குறைக்கிறார்கள். இங்கு வருபவர்களுக்குக் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. இது எய்ம்ஸ் (AIIMS) போன்ற உயர்தர மருத்துவமனைகளுக்கு இணையான உலகத்தரம் வாய்ந்த இதய சிகிச்சை வசதிகளைக் (Cardiology) கொண்டுள்ளது.இந்த மருத்துவமனையின் குடும்ப விவகாரங்களில் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) தலையிடுவதை மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்,. கார்ப்பரேட் நிறுவனங்களும் லாட்டரி தொழில் செய்பவர்களும் இணைந்து இந்த மருத்துவமனையை முடக்க நினைப்பதாகச் சந்தேகம் எழுப்பப்படுகிறது,அரசியல்வாதிகள் தங்கள் தொகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, மற்றவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று வலியுறுத்தினர்.
குடும்பப் பிரச்சினையில் சட்டமன்ற உறுப்பினர் தலையிடலாமா? சார்லஸ் மார்ட்டின் எம்எல்ஏவுக்கு தேசிய தேவர் பேரவை கூட்டமைப்பு அறிவுரை
August 15, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தில் பதிவான வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு
தமிழகம்
October 17, 2026
சூரிய ஒளி மின் தகடுகளை நிறுவிய 5 நாள்களுக்குள் இணைப்பு வழங்கப்படும்- மின் வாரிய அதிகாரி தகவல்
தமிழகம்