கோவை: அரசு வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

கோவையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனை பிரிவுகளின் முதல் விற்பனை பதிவு ஆன்லைனில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகம் வரவேண்டியதில்லை. வரும் 17ம் தேதி முத ல் இந்தமுறை அமலுக்கு வருகிறது. முதல்வர் விஜய் இந்த சேவையை துவங்கி வைக்கிறார். இடைத்தரகர்கள் தலையீட்டை குறைத்து, மக்களுக்கு எளிதாக ஆவண பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக பதிவுத்துறையின் அனைத்து சேவைகளும் ஆன்லைனில் கொண்டு வரப்படும். இது குறித்த சந்தேகங்களை போக்குவதற்கு 24 மணி நேரம் இயங்கும் உதவி மையம் திறக்கப்படும். அரசு வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் திட்டமில்லை. வழிகாட்டி மதிப்பில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. அவற்றை சரி செய்வதற்காக, ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.