மதுரை, செப்.28-
மதுரை தமுக்கம் அருகே ரூ.10.25 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திங்கட்கிழமைதிறந்து வைத்தார்.
மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் வகையில், அவரது மறைவுக்குப் பின்னர் நாட்டிலேயே முதன்முறையாக மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. தற்போது பழமை மாறாமல் பாதுகாக்கும் வகையில் ரூ.10.25 கோடி மதிப் பில்புனரமைப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு, நவீன வசதிகளுடன் அருங்காட்சியகம் புதுப்பிக் கப்பட்டுள்ளது.
காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைந்துள்ள வளாகம், 1670ஆம் ஆண்டு ராணி மங்கம்மாளால் கட்டப்பட்ட கோடைகால அரண்மனையாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சியர்களின் இல்லமாகவும் இக்கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. 13 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தை தமிழக அரசு 1955 ஆம் ஆண்டு அகில இந்திய காந்தி நினைவு நிதியிடம் ஒப்படைத்தது.இதைத் தொடர்ந்து அமைக் கப்பட்ட காந்தி நினைவு அருங் காட்சியகத்தை 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார்.அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி படுகொலை செய் யப்பட்டபோது அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த ஆடை,கண் ணாடி, காலணி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. காந்தி குடில், காந்தி அஸ்திபீடம் உள்ளிட்டவையும் இங்கு அமைந்துள்ளன.
அருங்காட்சியகத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, கடந்த ஆட்சிக் காலத்தில் ரூ.6 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பொதுப்பணித்துறை கட்டிட மையம் மற்றும் பாதுகாப்புப் பிரிவு சார்பில் பணிகள்தொடங்கப் பட்டன.
புனரமைப்புப் பணிகளின் போது சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறிந்து கொள்ள தொடுதிரை வசதிகள், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒலி-ஒளிக் காட்சி அரங்கம், ‘காந்தியும் மதுரையும்’ என்ற தலைப்பில் ஆவணப்படங்களை திரையிடும் வசதி, டிஜிட்டல் புகைப்படங்கள், டிஜிட்டல்திரைகள், தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் திட்ட மதிப்பீடு ரூ.10.25 கோடியாக உயர்ந்தது.புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து சுமார் ஓராண்டுக்கு முன்பே அருங்காட்சியகம் திறப்பு விழாவுக்குத் தயாராக இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் திறப்பு விழா தாமதமானது.
இந்நிலையில், முதலமைச்சர் மதுரை வருகையையொட்டி தற்போது அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சிக்குப் பின்னர் இதன் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்ததமிழ்நாடு பொதுப்பணித்துறையில் (PWD) பாரம்பரிய மற்றும் புராதனக் கட்டடங்களைப் பாதுகாப்பதற்காகவும், புனரமைப்பதற்காகவும் பிரத்யேகமாகச் செயல்படும்கட்டிட மையம் மற்றும் பாதுகாப்புப் பிரிவு பொறியாளர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில் செயற்பொறியாளர் அழகிரிசாமி, உதவி செயற்பொறியாளர் நான்சி மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.