சென்னை, அக்.2-

அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்.

பெண்கள் இனி, மாநகரம் மற்றும் நகர்ப்புறங்களில் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் தினசரி 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் வழியாக நாள்தோறும் சுமார் 1.76 கோடி மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அரசு பேருந்துகளை பெரிதும் நம்பி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக ஆட்சியில் விடியல் பேருந்து பயணம் திட்டம் மூலம் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமலில் உள்ளது.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் வென்ற தவெக தலைவர் விஜய் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்திருந்தார். இதற்கிடையே கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் வெற்றி பயணம் என்ற பெயரில் அக்டோபர் 2ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார்.

தற்போது 7 அரசு போக்குவரத்துக் கழகங்களில் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டர் வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் மகளிர் கட்டணம் இன்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வெற்றி பயணத் திட்டத்தின் மூலம் இந்த சேவை மாநகர் நகர் பகுதியில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசு பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகள் ஆகியவற்றுக்கு பொருந்தும். மொத்தம் 12,692 பேருந்துகள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

இதன் மூலம் ஒரு நாளைக்கு 84 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தினை மகாத்மா காந்தி பிறந்த நாளான இன்று (அக்டோபர் 2ஆம் தேதி) தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய். ஏற்கனவே சொன்னது போல 7 அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் 18,000 பேருந்துகளில் சுமார் 12,600 பேருந்துகள் இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 69% என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு 1 லட்சத்து 94 ஆயிரம் நடைகள் இயக்கப்படும் நிலையில், 1,65,312 நடைகள் (85 விழுக்காடு) இந்த பயணத்தின் மூலம் இயக்கப்படுகிறது. இதனால் சுமார் 84 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள். இந்த பேருந்து பயணத் திட்டத்திற்கு மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடன் இணைப்பு பணி நடைபெற்று வருகிறது. கடந்த 25ஆம் தேதியும் 27ஆம் தேதியும் சோதனை மற்றும் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை இந்த திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

தமிழக மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொது போக்குவரத்து வசதி பெருமளவில் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் எனவும், மாண

விகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு கட்டணம் இன்றி பேருந்துகளில் பயணிக்க முடியும் என தமிழக அரசு வீடியோ வெளியிட்டுள்ளது.