முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமாகிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.