இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர். அடுத்து ஆடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனி ஆளாகப் போராடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் 3-வது பேட்டராக களம் இறங்கி அதிக ரன்கள் அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். கோலிக்கு அடுத்த இடங்களில் பாண்டிங் - 12662 (330 இன்னிங்ஸ்) | சங்ககாரா 9747 (238 இன்னிங்ஸ்) | காலிஸ் 7774 (200 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளனர்.