ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்​கெட் போட்டியில் பங்​கேற்​கும் இத்​தாலி அணி அறிவிக்கப்​பட்டுள்ளது.

ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்​கெட் போட்டி பிப்​ர​வரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்​றும் இலங்​கை​யில் நடக்​கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இந்​தப் போட்​டி​யில் முதல் முறை​யாக விளை​யாட இருக்கும் இத்​தாலி அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. தென் ஆப்பிரிக்க முன்​னாள் கிரிக்​கெட் வீரர் ஜே.ஜே.ஸ்மட்ஸ் இடம்​பெற்​றுள்ள 15 பேர் கொண்ட அணிக்கு வெய்ன் மேட்​சன் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்டு உள்​ளார்.

ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் பங்கேற்​கும் இத்​தாலி அணியில், வெய்ன் மேட்சன் (கேப்​டன்), ஜைன் அலி, மார்​கஸ் காம்​போபி​யானோ, அலி ஹசன், கிரிஷன் கலுகமகே, ஹாரி மானென்​டி, ஜியான் பியோரோ, அந்​தோனி மோஸ்​கா, ஜஸ்டின் மோஸ்​கா, சையத் நக்​வி, பெஞ்​சமின் மானென்​டி, ஜஸ்​பிரீத் சிங், ஜே.ஜே. ஸ்மட்​ஸ், கிரான்ட் ஸ்டூவர்ட், தாமஸ் டிரா​கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். . ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்​டி​யில் பங்கேற்பதற்காக இது​வரை இது​வரை 15 நாடு​களின் அணி​கள் அறிவிக்​கப்​பட்டு விட்​டது குறிப்பிடத்தக்கது.