இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது. மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

அடுத்து ஆடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2 - 1என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் டேரெல் மிட்சல் 9 ரன்களில் முதலிடத்தை தவற விட்டுள்ளார். இந்த தொடரில் அவர் 352 ரன்கள் குவித்து 3 ஆம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில பாபர் - 360 ரன்கள் (வெஸ்ட் இண்டீஸ்) மற்றும் கில் 360 ரன்கள் (நியூசிலாந்து) ஆகியோர் உள்ளனர்.