அமெரிக்காவின் மிச்சிகனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் டெட்ராய்ட் நகருக்கு வடமேற்கில் அமைந்துள்ளது மசவூகி எனப்படும் சிறிய கவுன்டி குடியிருப்பு. இங்கு துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதாக இன்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றபோது 3 பேர் சம்பவ இடத்தில் இறந்து கிடந்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது, 39 வயதான சாட் ஹிக்மேன் என்ற சந்தேக நபர் தப்பியோடியது தெரியவந்தது. நீண்ட தேடுதலுக்கு பிறகு போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சண்டையில் அவர் கொல்லப்பட்டார். அவர் வெவ்வேறு இடங்களில் இன்னும் இருவரையும் சுட்டுக் கொன்றிருப்பது தெரியவந்துள்ளது.
குற்றவாளியையும் சேர்த்து மொத்தம் 6 பேர் பலியாகியுள்ளதாக மிச்சிகன் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம், மிகுந்த வேதனை அளிக்கிறது. புலனாய்வாளர்களுக்கு சவாலானதாகவும் உள்ளது என மிச்சிகன் போலீசார் தெரிவித்தனர்.