ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டது கட்டாயத்தின் பேரிலா அல்லது மனமாற்றமா என சிவ சேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டார். இது ஒரு உண்மையான நல்லெண்ண முயற்சியா அல்லது மாறிவரும் அரசியல் சூழலில் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் விரக்தி முயற்சியா? வெறும் கூட்டத்தைக் கூட்ட அவர் அழைத்து வரப்பட்டாரா அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இப்போது முஸ்லிம்களும் வரவேற்கப்படுகிறார்கள் என்பதைக் காட்ட அழைக்கப்பட்டாரா? இதற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த அழைப்பு மனமாற்றத்தால் வந்ததல்ல, கட்டாயத்தால் வந்தது என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர். என்ன செய்வது சகோதரரே, போய்த்தான் ஆக வேண்டும் என்று அங்கே மக்கள் கிசுகிசுப்பதை கேட்க முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.