2026 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு கொங்கு முன்னேற்றம் கழகம் மற்றும் கொங்குநாடு முன்னேற்றம் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த இரு கட்சிகளின் நிர்வாகிகளும் தங்களின் ஆதரவு கடிதங்களை அளித்தனர்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி இணக்கமாக இருந்து வரும் சூழலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அடுத்தடுத்து பல்வேறு கட்சிகள் இணைந்து வருகின்றன. ஏற்கனவே என்.டி.ஏ. கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், ஜான் பாண்டியன், பார்வர்ட் பிளாக், புதிய நீதிக் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் புதிய தமிழகம் மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. தலைமை பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மேலும் இரு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு கொங்கு முன்னேற்றம் கழகம் மற்றும் கொங்குநாடு முன்னேற்றம் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த இரு கட்சிகளின் நிர்வாகிகளும் தங்களின் ஆதரவு கடிதங்களை அளித்தனர்.