மகராஷ்டிரத்தில் விமான விபத்தில் பலியான மாநில துணை முதல்வர் அஜீத் பவாரின் அஸ்தி, நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரால் கரைக்கப்பட்டது.
மகராஷ்டிரத்தில் ஜனவரி 28-ம் தேதியில் மும்பையில் இருந்து அஜீத் பவாா் புறப்பட்ட தனி விமானம், புணே மாவட்டம் பாராமதி விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக தரையில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜீத் பவார் உள்பட 5 பேர் பலியாகினர். அஜீத் பவார் விமான விபத்தில் பலியான மறுநாளே, அவரது இறுதிச் சடங்குகள் பாராமதியில் நடைபெற்று முடிந்தது. லட்சக்கணக்கான மக்கள் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி, அம்மாநில துணை முதல்வராக அவரது மனைவியான சுநேத்ரா பவார் பதவியும் ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அஜீத்பவாரின் அஸ்தி கரைக்கப்பட்டது.