மதுரை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உச்சப்பட்டி–தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்டத்திற்குட்பட்ட உச்சப்பட்டி மற்றும் தோப்பூர் பகுதிகளில் உள்ள மொத்தம் 41 மனைகளுக்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் மின்னணு ஏலத்தில் பங்கேற்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உச்சப்பட்டி பகுதி-1, 2, 3, 4, 5, 6 மற்றும் 8, தோப்பூர் பகுதி-3, 5 மற்றும் தோப்பூர் தன்னிறைவுத் திட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள பொது உபயோக மனைகள், கடை மனைகள், பள்ளி மனைகள் மற்றும் வணிக மனைகள் என மொத்தம் 41 மனைகள் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் மின்னணு ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு காலக்கெடு 24.09.2026 முதல் 09.10.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் இணையதளம் மற்றும் தமிழ்நாடு அரசு மின்னணு ஒப்பந்தப்புள்ளி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து உச்சப்பட்டி–தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்ட செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 0452-2600094 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.