மதுரை, செப். 25-

திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி வெட்டக்கூடாது என்று ஏற்கெனவே கெடுபிடிகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது காய்கறி கொண்டுபோவ

தற்கும் போலீசார் தடை விதித்திருப்பதாக மசூதி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்கா தொடர்பாக, இந்துத்துவா அமைப்புகள் பல்வேறு பிரச்சனைகளை கிளப்பியிருந்தனர். இப்பிரச்சனைகள் கடந்த ஆட்சியில் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தன. இப்படி இருக்கையில் மீண்டும் பஞ்சாயத்துகள் கிளம்பியிருக்கின்றன.

திருப்பரங்குன்றத்தின் மலையின் மீது சிக்கந்தர் தர்கா அமைந்திருக்கிறது. இந்த தர்காவிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் கல் தூணை வைத்து இந்து அமைப்புகள் சர்ச்சையை கிளப்பியின. இது தீபம் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தூண் என்றும், இனி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் இந்த தூணில்தான் ஏற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தன. இது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இந்து அமைப்புகள் குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றமும் உத்தரவிட்டது.

ஆனால், அப்போதைய திமுக அரசு. சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் மத பிரச்சனைகளை காரணம் காட்டி இந்த தூணில் தீபம் ஏற்ற முடியாது என்று சொல்லிவிட்டது. இருந்தாலும், தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என்று இந்து அமைப்புகள் அடம்பிடித்தன. இருப்பினும் திமுக அரசு விடாப்பிடியாக தீபம் ஏற்றவே மாட்டோம் என்று சொல்லிவிட்டது.

இப்படியாக பிரச்சனை நடந்து, தற்போது அப்பிரச்சனை ஒரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் பஞ்சாயத்து கிளம்பியிருக்கிறது. அதாவது மசூதிக்கு காய்கறிகளை கொண்டு போக கூடாது என்று போலீசார் கெடுபிடிகளை விதித்திருப்பதாக மசூதி நிர்வாகத்தினர் குற்றம்சாட்டி

யிருக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் வழக்கமாக காலை 6 மணிக்கு மசூதியை திறப்போம். ஆனால், இப்போதெல்லாம் மசூதியை திறக்கவிடு

வதில்லை. இங்கு தங்கியி

ருப்பவர்கள் சமைத்து சாப்பிட காய்கறிகள் வேண்டும். கீழிருந்து வாங்கிதான் நாங்கள் அதை இங்கு கொண்டு வருவோம். ஆனால், காய்கறிகளை கொண்டுவரவும் அனுமதிக்கவில்லை. அடுப்பை பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். சோலார் அடுப்புக்கு கூட அனுமதி இல்லை. நெல்லித்தோப்பு பகுதி முழுவதையும் காவல்துறையினர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த இடம் இன்னும் பதற்றமானதாகவே இருக்கிறது.

கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று சொல்கிறார்கள். உயர் அதிகாரிகளிடம் விசாரித்தால் அப்படி எந்த உத்தரவையும் போடவில்லை என்கிறார்கள். தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். சிக்கந்தர் தர்காவில் நாங்கள் வழிபாட்டு உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டு வருகிறோம்” என்று வேதனை தெரிவித்து

ள்ளனர்.

கடந்த ஆட்சியில் இஸ்லா

மியர்களுக்கு ஆதரவாக திமுக அரசு நின்றது என்று கூறும் மதுரை மக்கள், இந்த ஆட்சியும் இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை காக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்