தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களை வலியுறுத்தியும் நான்கு அம்ச கோரிக்கைகளுடன் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சமயச்செல்வம் நிர்வாகிகள் வீரக்குமார் ராஜாஜி ஆகியோர் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர் அந்த மனுவில் 1. தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு மாவட்ட அளவில் வழங்கக்கூடிய செய்தியாளர்கள் அடையாள அட்டையை தமிழகம் முழுவதும் வழங்கிட வேண்டியும்
2. ஒய்வு பெற்ற செய்தியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கக்கூடிய ஓய்வூதியத்தை ரூ.20000 (ரூபாய் இருபதாயிரம்) ஆக உயர்த்திட வேண்டியும்
3. செய்தியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட நலவாரியத்தை முறையாக செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள செய்தியாளர்களுடைய பிள்ளைகளுக்கு உதவித்தொகை உடனே கிடைக்க உதவிட வேண்டியும்
4. மதுரை மாவட்டத்திலுள்ள செய்தியாளர்களுக்கு வீட்டுமனை வேண்டி விண்ணப்பம் செய்ததில் வெகு நாட்களாக நிலுவையில் உள்ளது. அதனை பரிசீலனை செய்து உடனடியாக வீட்டுமனை வழங்கிட நடவடிக்கை வேண்டியும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர் இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகஅமைச்சர் உறுதி அளித்துள்ளார்.