தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை திரிஷா. கோலிவுட்டின் நட்சத்திர நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். திரிஷாவை பொறுத்தவரை, கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தான் சினிமாவில் அவருக்கான முதல் அறிமுகம். 2002-ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

42 வயதாகும் திரிஷா தொடர்ந்து நாயகியாக நடித்து வருகிறார். ஆனால், திரிஷா தனது ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் நடித்துள்ளார். 2000-களில் வெளியான ஜூனியர் ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் 2 வயது குழந்தைக்கு தாயாக நடித்திருந்தார் திரிஷா. 90-ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் இந்த விளம்பரம் நினைவிருக்கலாம். அப்போது திரிஷாவுக்கு 19 வயது தான் என கூறப்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் இந்த விளம்பரம் வைரலாகி வருகிறது.