தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய் நடித்து, பிரபல இயக்குனரான ஹெச்.வினோத் இயக்கி பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ் மற்றும் பல நடிகர்கள், நடிகை நடித்து உருவான படம் தான் ஜனநாயகன். குடும்பங்களுடன் பார்த்து ரசிக்கும் படி ஆக்சன் மற்றும் அரசியல் கலந்த கலவையாக இப்படம் உருவாகி உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்சார் சான்றிதழ் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது வரை ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், கோவை விமான நிலையத்திற்கு வந்த நடிகை சோனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் அரசியலிலும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மேலும் ஜனநாயகன் படம் வராதது எனக்கும் ஏமாற்றமாக தான் உள்ளது. ஆனாலும் ஜனநாயகன் படம் எப்ப வந்தாலும் வெயிட் பண்ணி பார்ப்போம். எப்படி இருந்தாலும் படம் ஹிட்தான் என தெரிவித்தார்.