மதுரை, அக். 17-
மதுரையில் கிராமப்புற வேலைக்கான வி பி ஜி ராம்ஜி திட்டத்தில் பணி
யாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஆறு வாரங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காததால் தவிக்கின்றனர்.
தேசிய அளவில் நுாறு நாள் வேலைத் திட்டமானது கடந்த ஜூலை முதல் வி பி ஜிராம்ஜி என்ற பெயரில் 125 நாள் வேலை திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் கண்மாய் உருவாக்குவது, கரையை பலப்படுத்துவது, ஆழப்படுத்துவது, ரோடு அமைப்பது, ரோட்டோரம் மரக்கன்றுகளை நடுவது உட்பட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் தினக்கூலியாக ரூ.338 வழங்கப்படும். ஒன்றிய அளவில் கண்மாய் பணிகளை நிர்ணயித்து அதன்படி பணிகள் முடிந்தால் அத்தொகை கிடைக்கும். இல்லையெனில் செய்த பணிக்கேற்ப அளவீடு செய்து ரூ.250 முதல் 300 வரை சம்பளம் பெற்று வருகின்றனர். வாரம்தோறும் தொழிலாளர்களுக்கு இக்கூலி வழங்கப்படும்.
புதிய திட்டப்படி இத்திட்டத்தில் கூடுதலாக பலர் சேர்க்கப்பட்டு பணிபுரிகின்றனர். பெரும்பாலும் பெண்களில் ஆதரவற்ற, முதியோர், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் 50 முதல் 100 பேர் வரை பணியாற்றுகின்றனர். பல கிராமங்களில் ஆண்டுக்கு 60 முதல் 75 நாட்களுக்கே பணி வழங்க முடிகிறது.
தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் பல ஆயிரம் பேருக்கு ஆறு வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை நம்பி இருப்பதால் வேறு பணிக்கும் செல்ல முடியவில்லை. ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை தரவேண்டும். தீபாவளி நேரத்தில் சம்பளம் இல்லாமல் தவிக்கிறோம். உடனே வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுகக் வேண்டும்’’ என்றனர்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சதீஷ்பாபுவிடம் கேட்டபோது, ‘‘எல்லா மாவட்டங்களிலும் இப்பிரச்னை உள்ளது. அக்.1 வரையான நிதிபெற
ப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. எனவே தொழிலாளர்
களுக்கான வங்கிக் கணக்கில் நாளை (இன்று) வரவு வைக்கப்படும். நிலுவையில் உள்ள தொகையும் உடனே விடுவிக்க ஏற்பாடு நடக்கிறது. தற்போது ‘ஓவர்சீயர்’ வாரியாக (நான்கைந்து கிராமங்களுக்கு சேர்த்து) வழங்க எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் தாமதமாக வாய்ப்பில்லை’’ என்றார்.