மதுரை, அக். 17-
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கூட்டரங்கில், மாநகராட்சி, வாஸன் கண் மருத்துவ
மனை மற்றும் கே.ஆர்.எஸ். பல்நோக்கு மருத்து வமனை ஆகியவை இணைந்து நடத்திய மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை மாநகராட்சி ஆணையர் கவுரவ் குமார் தொடங்கி வைத்தார்.
கண்புரை, கிட்டப்பார்வை, அழுத்தம், கண் கண்ணாடி பரி தூரப்பார்வை, கண்ணில் நீர் சோதனை, சர்க்கரை நோயால் கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிதல், இ.சி.ஜி., நுரையீரல் செயல்பாடு திறன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. துணை ஆணையர் ஜெய்னு லாப்தீன், மருத்துவர்கள் ரம்யா, அர்ஜூன் கிரு
ஷ்ணன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.