முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள். ஆயிரமாவது குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் (2023, 2 ஆயிரமாவது குடமுழுக்கு - மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில் (2024), 3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோவில் (2025), 4 ஆயிரமாவது குடமுழுக்கு - இன்று(நேற்று), பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோவிலில்... இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழகத்தின் வரலாற்றில் இல்லை! மதவாத அரசியல் செய்வோர்க்கு தமிழகத்தில் இடமில்லை. திராவிட மாடல் = எல்லாருக்கும் எல்லாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஒரு காணொலி காட்சி ஒன்றையும் அவர் டேக் செய்துள்ளார்.