சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வேளாண் அமைச்சர் வினோத் இன்று காலை சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்திற்கு மாநில அரசின் சார்பில் ரூ.648 கோடி நிதி ஒதுக்கீடு.
* பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.648 கோடி நிதி ஒதுக்கீடு
* ரூ.122.51 கோடி மதிப்பில் தமிழ்நாடு மண்வள இயக்கம் அமைக்கப்படும்.
* விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு
* நெல் விதை வழங்க மானியம் வழங்க ரூ.34.72 கோடி நிதி ஒதுக்கீடு
* மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு
* ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி; ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
* பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கம்; ரூ.203.64 கோடி நிதி ஒதுக்கீடு
* உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் அமைக்க ரூ.63.81 கோடி ஒதுக்கீடு
* சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பணவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம்; ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு
* பருத்தி உற்பத்தியை பெருக்க ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு
* விவசாய நிலங்களில் பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டத்துக்கு ரூ.17.70 கோடி ஒதுக்கீடு
* அம்பேத்கர் வேளாண் உதவி திட்டத்துக்கு ரூ.56.72 கோடி ஒதுக்கீடு
* காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டத்துக்கு ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு
* விளைபொருட்களை பாதுக்காக 43,500 தார்ப்பாய்கள் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
* 5 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.11 லட்சம் ஒதுக்கீடு
* 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்க ரூ.27.82 கோடி நிதி ஒதுக்கீடு
* திரவ உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.56 கோடி நிதி ஒதுக்கீடு
* விதை சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு
* 17.315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியம் வழங்க ரூ.9.36 கோடி ஒதுக்கீடு
* கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு
* பனை பாதுகாப்பு இயக்கம் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
* வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
* தமிழ்நாடு தளிர்கிரைகள் திட்டத்துக்கு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு
* தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை உயரத்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளை ஊக்குவிக்க ரூ.41 கோடி ஒதுக்கீடு
* நன்னெறி சாகுபடி; நஞ்சற்ற உற்பத்தி, உலகளாவிய ஏற்றுமதிக்கு ரூ.8.43 கோடி ஒதுக்கீடு
* தென்னை சிறப்பு திட்டத்துக்கு ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகத்துக்கு ரூ.5.30 கோடி ஒதுக்கீடு.
* வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு
* நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டத்துக்கு ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு
* 24 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்க ரூ.227.2 கோடி நிதி ஒதுக்கீடு
* வான்மகள் திட்டத்துக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு
* 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்க ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு
* ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பை உருவாக்கிட ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு
* சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு
* வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.8.13 கோடி நிதி ஒதுக்கீடு
* நன்னீர் கிணறுகள் அமைத்து மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடி செய்ய ரூ.49.4 லட்சம் நிதி ஒதுக்கீடு
* 100 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கதிரடிக்கும் களங்கள் அமைக்க ரூ.2.8 கோடி நிதி ஒதுக்கீடு
* கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களின் களப்பயிற்சிக்காக 6 புதிய பஸ்கள் வாங்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
* தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் நம்வாழ்வார் பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரிக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
* நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
* 2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 100 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குள் வசதிகள் ஏற்படுத்த ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு
* புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம் அமைக்க ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு
* திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம், கும்பகோணத்தில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்க ரூ.4.6 கோடி நிதி ஒதுக்கீடு
* 50 உழவர் சந்தைகளில் மின்னணு விலைப் பலகைகள் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
* உழவர் சந்தைகள் புனரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
இவ்வாறு அமைச்சர் வினோத் கூறினார்.