அசன்: கொரியா மாஸ்டர்ஸ் சுப்பர் 300 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இத்தொடரில் 3ம் நிலை வீரராகக் களமிறங்கிய உலகின் முன்னாள் நம்பர் 1 கிடாம்பி 20-22, 21-14, 12-21 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் டேனியல் டுபோவென்கோவிடம் போராடி தோற்றார்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 50 நிமிடத்துக்கு நீடித்தது. மற்ற இந்திய வீரர்கள் ரவ்னக் சவுகான், கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத், சனீத் தயானந்த், தருண் மன்னெபள்ளி ஆகியோரும் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி ஏமாற்றமளித்தனர். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய இந்திய நட்சத்திரம் தன்வி ஷர்மா 21-16, 21-15 என்ற நேர் செட்களில் சீனாவின் யுவான் ஆன் கியை வீழ்த்தினார்.