உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை ரயில்வே நிலையம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், மதுரை கல்லூரியின் 20 NCC மாணவர்கள் மற்றும் NCC அதிகாரி லெப்டினென்ட் கார்த்திகேயன் பங்கேற்றனர். ரயில் நிலையத்தில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சுற்றுச்சூழலை மேம்படுத்த மரக்கன்றுகளும் ரயில்வே நிலைய வளாகத்தில் நடப்பட்டது.

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டை சுகாதார ஆய்வாளர் ஜெனிலா ஏற்பாடு செய்திருந்தார்.