தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரச்சாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப் பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் தே.மு.தி.க மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூர் மாவட்டம் வேப்பூரில் நேற்று நடைபெற்றது. முன்னதாக, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்துடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.