மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது,
விஜய்யை எந்த நாட்டுக்கு செங்கோட்டையன் முதல்வராக்குவார்? ஏதாவது ஒரு கல்லூரிக்கு வேண்டுமானால் விஜய்யால் முதல்வராக முடியும். அ.தி.மு.க.வில் இருந்து சென்ற செங்கோட்டையனை த.வெ.க.வில் உள்ள நிர்வாகிகளே மதிப்பதே இல்லை. செங்கோட்டையன் வயதானவர் என த.வெ.க.வினர் அவரை தள்ளி விட்டு செல்கின்றனர். செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு. அவரை த.வெ.க.வினரே ஏற்று கொள்ளவில்லை. ஆதவ் அர்ஜூனாவுக்கு என்ன தெரியும். அ.தி.மு.க.வை பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது. லாட்டரி சீட்டு மூலம் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சிய ஆதவ் ஆர்ஜூனா எங்களை பற்றி பேசக் கூடாது. உதயநிதி எங்களை திட்டிக் கொண்டே இருக்கட்டும். திட்டத்திட்டத்தான் எங்களுக்கு வளர்ச்சி. கருணாநிதி, ஜெயலலிதா போல ஸ்டாலின் - எடப்பாடி இடையேதான் போட்டி. சட்டசபை தேர்தலில் எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் இடையேதான் நேரடி போட்டி. இவ்வாறு அவர் கூறினார்.