தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால், இந்த முறை நான்கு முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

விஜய்யின் த.வெ.க.விற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விசில் சின்னத்தை விஜய் கோரிய நிலையில், அதே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில், மோகன் ஜியின் திரெளபதி 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பா.ஜ.க. பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி, செய்தியாளர்களிடம் கூறுகையில்,

விஜய் விசில் சின்னம்தான் கேட்பார் என ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே பேசினேன். அது நான் கொடுத்த ஐடியாதான். தை பிறந்ததும் அவருக்கு சின்னம் பிறந்திருக்கிறது. அடுத்ததாக அவர் சேர வேண்டிய இடத்திற்கு வழி பிறந்திடும் என்று தெரிவித்தார்.