‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு இயற்றியுள்ள சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மதுரையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் ஜீவா நகர் பகுதியில்நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் எம். பாரதி தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.என். நவாஸ், எம். முகமது அலி ஜின்னா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கண்டன உரைகள் நிகழ்த்தப்பட்டன.
மேலும், தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், மதுரை மாநகராட்சி மேயர் டி. நாகராஜன், மாவட்டத் தலைவர் கே. அலாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பாக செயலாளர் A, சேக் அப்துல் சத்தார் (எ) ஆம்புலன்ஸ் சேக் பொருளாளர் முகமது பாரூக் மைதீன் மற்றும் மதுரை மற்றும் அருட்தந்தை பால் பிரிட்டோ. அருள் தந்தை பெனடிக் பர்னா பாஸ் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முபாரக் நிஜாமுதீன் மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பிலும் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பை பாதுகாக்க வேண்டும் என்றும், எந்தவொரு பாடலையும் மக்களிடம் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகிகள், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.