மதுரை, அக். 17-
‘மதுரை நகரில் மக்கள், போக்குவரத்க்கு இடையூறாக ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு இனி கோசா
லையில் அடைக்கப்படும்’ என மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார் எச்சரித்துள்ளார்.
ஆரப்பாளையம், செல்லுார் பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து செல்லுார் மாநக
ராட்சி மாட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட மாடு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கமிஷனர் கூறியதாவது: டி.ஆர்.ஓ., காலனி, ஆத்திகுளம், உத்தங்குடி, வைகை ஆற்றின் வடக்கு, தெற்கு கரையோரப் பகுதிகள், கோரிப்பா
ளையம், மாட்டுத்
தாவணி மத்திய சந்தை, நெல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் வளர்ப்ப
வர்களுக்கு மாநக
ராட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்ஸ் அளிக்க
ப்பட்டு வருகின்றன. மாடு வளர்ப்போர் சொந்த இடத்தில் வைத்தே பராமரிக்க வேண்டும். ரோடுகளில் திரிய விடக்கூடாது. தவறி
னால் கோசாலையில் அடைப்பதுடன், சட்ட நடவ
டிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.