மதுரை, அக். 17-
அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது எச்ஐவி தொற்று ரத்தம் செலு
த்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட தாய், மற்றும் குழந்தைக்கு ரூ.40 லட்சம் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 22.10.2022ல் பிரசவ
த்திற்காக ஒரு பெண் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட மருத்துவ சிக்கல்கள் காரணமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவ
மனை ரத்த வங்கியிலிருந்து பெறப்பட்ட ரத்தம் அவருக்கு ஏற்றப்பட்டது.
ஆனால், அந்த ரத்தம் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது பின்னர் தெரியவந்தது. இதனால், அப்பெண்ணு
க்கும், பிறந்த பச்சிள
ங்குழந்தைக்கும் எச்ஐவி தொற்று பரவியது. அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்பிற்குத் உரிய இழப்பீடு வழங்கக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவசர கால செலவுகளுக்காக ரூ.2.50 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், தாய், சேய் நலனை கருத்தில் கொண்டு தாய்க்கும், குழந்தைக்கும் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் கருணைத்தொகையாக வழங்க அரசு முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘’மனுதாரரான தாய்க்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.2.50 லட்சத்தைக் கழித்து, மீதமுள்ள தொகையை இரண்டு வாரங்களுக்குள் எவ்வித நிபந்தனையுமின்றி நேரடியாக வழங்க வேண்டும். குழந்தையின் பெயரில் ரூ.20 லட்சம் தொகையை ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ வட்டியுடன் கூடிய நிரந்தர வைப்புத் தொகையாக டெபாசிட் செய்ய வேண்டும்’’ என உத்தர
விட்டு மனுவை முடித்து வைத்தார்.