ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 5.25 சதவீதமாக நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதமாகும். இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி கூடி ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன்படி 3 நாள் நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறித்து நேற்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 5.25 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
இந்திய பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. தற்போதைய நிலைமை கருத்தில் கொண்டு ரெப்போ வட்டி விகித்தை மாற்றமின்றி 5.25 சதவீதமாக தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
சமீபத்தில் முடிவடைந்த இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தியா, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை ஏற்றுமதியை அதிகரிக்க வழிவகுக்கும். அடுத்த நிதியாண்டின் முதல் மற்றும் 2-ம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதம் மற்றும் 7 சதவீதமாக இருக்கும் என்றார்.