முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணுக்கு (100) மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி தவறி விழுந்து காயமடைந்தார். அப்போது மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அடிக்கடி மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில், நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.